ஆர்யா, கவுதம் கார்த்திக் நடிப்பில் மனு ஆனந்த் இயக்கத்தில் பான் இந்தியா படமாக உருவாகும் ‘மிஸ்டர் எக்ஸ்’ (திரைப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் இணைந்துள்ளார்.
இந்த படத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்தது.இப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கவுதம் கார்த்திக் சவாலான வேடத்தை ஏற்றிருக்கிறார். மிக முக்கியமான வேடத்தில் மஞ்சு வாரியர் நடிக்கிறார்.
கடந்த சில வாரங்களுக்கு முன் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது. பொழுதுபோக்கு கலந்த ஆக்சன் திரைப்படமாக உருவாகும் இந்தப்படத்தை ‘எப்ஐஆர்’இயக்குநர் மனு ஆனந்த் இயக்குகிறார்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லஷ்மன்குமார் இந்தப்படத்தை தயாரிக்கிறார். மிஸ்டர் எக்ஸ் படத்திற்காக இந்தியா, அசர்பைஜான் மற்றும் ஜாரிஜியா ஆகிய நாடுகளில் படமாக்கப்படும் அதிரடி சண்டை காட்சிகளை இயக்குனர் ஸ்டண்ட் சில்வா வடிவமைக்கிறார்.
திபு நிபுணன் தாமஸ் இசையமைப்பில் உருவாகும் இந்தப்படத்தின் ஒளிப்பதிவை தன்வீர் மிர் கவனிக்க, படத்தொகுப்பை பிரசன்னாஜிகே மேற்கொள்ள இருக்கிறார்.
ஏ.வெங்கடேஷ் இணை தயாரிப்பில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்தப்படத்தில் இடம்பெறும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம் விரைவில் அறிவிக்கப்படும்