வட சென்னை ரவுடிக்கே கதையில் குருதிக் குளியல் நடத்தி விடுவார்கள். தலை நகரம் 2-வில் 3 மெயின் வில்லன்கள். வட ,தென்,மத்தி என மூணு என.!
வெண் திரையே , செவப்பா ‘சிலாட்டர் ‘ஹவுஸ் மாதிரி ரத்த வாடை வீசுதப்பா.!டைரக்டர் வி.இசட் .துரை ஆடு மாடு வெட்டுற இடத்துக்குப் போயி வந்திருப்பார் போல.!ஆனா இந்த கதையையும் யூ டியூபர்ஸ் பல பேரு கைதட்டி வரவேற்றாங்க !
ஒரு காலத்துல ஜெக ஜால கில்லாடி ரவுடியாக இருந்த சுந்தர்.சி .யை போட்டுத் தள்ள மூணு ஏரியா கில்லாடி ரவுடிகள் முயற்சிப்பது, அதிலிருந்து எப்படியெல்லாம் தப்பிக்கிறார் சுந்தர்.சி. என்பதுதான் கதை.இன்னொரு சிறப்பு 3 பொம்பள ரவுடிகள் .மறைவிடங்களில் வைத்து கடத்தல் செய்வதெல்லாம் இந்த அலேக் சுந்தரிகளின் குவாலிபிகேஷன். காட்டுறாங்கபா !!!
காமடி இல்லை,லவ்ஸ் இல்ல,ஆனா கவர்ச்சி இருக்கு. பாலக் லால்வானி புண்ணியம்.!
ரைட்டாக வருகிற சுந்தர் டைட்டாக நடிச்சிருக்கிறார்.சிரிக்க சீன் கிடையாது. கட்டிப்பிடிச்சு ரொமான்ஸ் பண்ண ஆள் கிடையாது. சண்டை..சதக் சதக் …மூஞ்சி எல்லாம் ரத்தம் .இதான் சுந்தர்.சி.!ஆக்சன் பிளாக்ஸ் தெறிக்கிற மாதிரி இருக்கு.
கடப்பாரை வில்லன்களில் ‘பாகுபலி’ பிரபாகர் அந்தக் காலத்து பி.எஸ்.வீரப்பா மாதிரி.மொகரக்கட்டையில் கொடூரம் இருந்தா போதும் .!இந்த படத்துக்கு தேவையான வில்லன்ஸ் தேர்வு சூப்பர்.
தேடித் திரிகிற ரவுடிகள் கரெக்ட்டாக தம்பி ராமையாவின் அஸ்தி,கைக்கடியாரம் இவைகளை சுந்தர் இருக்குமிடம் தெரிந்து கொண்டு வந்து வைக்கிறார்கள். அவர்கள் சுந்தரை வதம் செய்ய வாய்ப்பிருந்தும் ,வாய்தா வாங்கிப்போவது போல விட்டு வைப்பது ஏனாம்? நம்ம மண்டைக்குள் ஏகப்பட்ட ஆளுநர்கள்.!
சுந்தருக்கு சுண்டல் என்கிறபோது பாலக் லால்வானிக்கு மட்டும் பாதாம் அல்வாவா கொடுப்பார்கள்? நீர் மோர் வெயிலுக்கு நல்லது.
தம்பி ராமையா நல்ல மனுஷன். பாயாக நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் கிருஷ்ணசாமியை பாராட்டியே ஆக வேண்டும். வசனம் எழுதிய மணி ஸ்ரீயையும்.!
இசை ஜிப்ரான்.
ஓவர் வன்முறை.!
—தேவி மணி












