சோல்ஜர்ஸ் ஃபேக்டரி & பேஷன் ஸ்டுடியோஸ்தயாரிப்பில் , ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய படம் ’பார்க்கிங்’*
திரில்லர் ட்ராமாவாக உருவாகும் இப்படத்தில் ஹரிஸ் கல்யாணுடன் எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் படத்தில் இந்துஜா நாயகியாக நடிக்கிறார்.
இப்படத்தின் முழு படப்பிடிப்பும் சென்னையில் மும்முரமாக நடந்து வரும் இதன் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளது.இப்படத்தின் ஒளிப்பதிவை ஜிஜு சன்னி கவனிக்க,சாம் சிஎஸ் இசையமைத்து வருகிறார்.