சில பல காட்சிகளைப் பார்த்த உலகநாயகன் கமல்ஹாசன் வியந்து போய் விட்டார்.
இந்தியன்.2 அவரை மகிழ்ச்சி கடலில் நீந்த வைத்து விட்டது. விலை உயர்ந்த’பானேராய் லுமினார் ‘கைக் கடிகாரத்தை தனது பாராட்டின் அடையாளமாக தந்து இருக்கிறார் .அதன் விலை 8 லட்சம் .
தன்னுடைய டிவிட்டர் பதிவில் அவர் பதிந்திருப்பது இதோ.!
‘இந்தியன் 2’ படத்தின் பிரதான காட்சிகளை இன்று பார்த்தேன். என் உளமார்ந்த வாழ்த்துகள்
இதுவே உங்கள் உச்சமாக இருக்கக் கூடாது என்பதும் என் அவா. காரணம், இதுதான் உங்கள் கலை வாழ்வின் மிக உயரமான நிலை. இதையே உச்சமாகக் கொள்ளாமல் திமிறி எழுங்கள். பல புதிய உயரங்கள் தேடி.
–அன்பன் கமல்ஹாசன்