நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர், லால் சலாம் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகவுள்ளது.
இதையடுத்து ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.
இந்த நிலையில் கிடைத்த சின்ன இடைவெளியில், நடிகர் ரஜினி காந்த், தற்போது ஜாலி ட்ரிப் சென்றுள்ளார்.
சென்னையில் இருந்து இலங்கை வழியாக இந்திய நடிகைகளின் திடீர் உல்லாசபுரியாக மாறியுள்ள மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அவருக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் இலங்கையில் சிறப்பான வரவேற்புக் கொடுத்துள்ளது .
இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.