டப்பிங் பேசியபோது ஏற்பட்ட மூச்சு திணறல் நடிகர் மாரிமுத்துவை மரணத்துக்கு கொண்டு சென்று விட்டது . திரைப்பட இயக்குநர் கனவுடன் வந்தவர் மாரிமுத்து.சில படங்களை இயக்கியவரை நடிகனாக ஏற்றுக்கொண்டு தமிழ்த் திரை உலகம் நல்ல ஆதரவு தந்தது. அப்போதுதான் எதிர்நீச்சல் என்கிற டி . வி.நாடகம் அவரை உச்சத்துக்கு அழைத்துக்கொண்டு பயணித்தது. ஆதி குணசேகரன் என்கிற கேரக்டர் வீடு தோறும் விமர்சிக்கப்பட்டது. இவர் இல்லையேல் அந்த நாடகமே இல்லை என்கிற நிலை.
அவரது மரணம் மிகப்பெரிய இழப்பு. இனி ஆதி குணசேகரனை பார்க்க முடியாது.
அவரது குடும்பத்தினருக்கு சினிமா முரசம் சார்பில் இரங்கலை பதிவு செய்கிறோம்.