தி காஷ்மீர் பைல்ஸ் மற்றும் கார்த்திகேயா 2 ஆகிய படங்களைத் தொடர்ந்து பான் இந்தியா பிளாக்பஸ்டர்களை உருவாக்கிய அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் பேனரின் கீழ் அபிஷேக் அகர்வால் டைகர் நாகேஸ்வர ராவ் படத்தைப் பிரமாண்டமாகத் தயாரித்துள்ளார்.
இப்படத்தில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக நூபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.தற்போது வெளியாகியுள்ள போஸ்டரில் ரவி தேஜா, டைகர் நாகேஸ்வர ராவ் பாத்திரத்தில் கண்களில் பொறி பறக்க உக்கிரமாக காணப்படுகிறார்.
வரும் செப்டம்பர் 21ஆம் தேதி இப்படத்தின் இரண்டாவது பாடலான வீடு வெளியாகிறது. இப்படத்தின் ஒளிப்பதிவை R மதி ISC செய்கிறார், அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.
ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுத, மயங்க் சிங்கானியா இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.அக்டோபர் 20-ம் தேதி தசரா பண்டிகை வெளியீடாக ரிலீஸாகிறது.