தமிழ்த்திரையுலகில் கடந்த பத்து வருடங்களுக்கு மேல் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை திரிசா. இவருக்கும் தெலுங்கு நடிகர் ரானாவுக்கும் காதல் என்று ம் ,விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளபோவதாகவும் தமிழ்,தெலுங்கு திரையுலகில் பரவலாக பேசப்பட்டது.இந்நிலையில் ராணாவும்,திரிசாவும் பிரிந்து விட்டனர் என்ற பரப் பரப்பான தகவல்கள் உலா வந்த நிலையில் ,திரிசாவிற்கும் படத்தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக செய்திகள் வெளியானது. இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களும் வெளியாகின. ஆனால் திருமண நிச்சயதார்த்தமே நடக்கவில்லை என திரிஷா அவசர ,அவசரமாக அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில் , திரிஷா-வருண்மணியன் திருமண நிச்சயதார்த்தம் இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள வருண் மணியன் வீட்டில் நடந்தது. இதில் இருவீட்டாரின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை.
நிகழ்ச்சியில் த்ரிஷாவும், வருண்மணியனும் மோதிரம் மாற்றிக் கொண்டார்கள். உறவினர்களுக்கு ருசியான மதிய விருந்தும் பரிமாறப்பட்டது.தனது திருமண நிச்சயதார்த்ததுக்காக சக நடிகர், நடிகைகளுக்கு திரிஷா நாளை விருந்து கொடுக்கிறார். கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்த விருந்து நிகழ்ச்சி நடக்கிறது.திருமணத்துக்குப் பிறகும் நடிப்பைத் தொடரப் போவதாக தி ரிஷா அறிவித்துள்ளார்.