
தமிழ் திரை உலகில் முன்னணி நட்சத்திரமாக இருந்தவர் மீனா.
பெங்களூருவை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் வித்யா சேகரை மணந்து கொண்டு திரை உலகிலிருந்து விலகி இருந்தார். ஆனால் விதிவிளையாடி விட்டது. கணவர் உடல் நலமின்றி இறந்து விட்டார் . இவர்களுக்கு நைனிகா என்கிற மகள் இருக்கிறாள் . தற்போது 12 வயதாகிறது.
தனிமையில் இருக்கிற மீனாவுக்கும் ,மனைவியை பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கிற நடிகர் தனுஷுக்கும் திருமணம் நடக்கப் போவதாக சில ஊடகங்கள் செய்திகளை பரப்பி வந்தன.
இது உண்மையாக இருக்குமா?
மீனாவே மனம் நொந்து அந்த செய்தியை மறுத்திருக்கிறார்.
“மனசு ரொம்பவும் வலிக்கிதுங்க . எனக்கு அந்த மாதிரியான எண்ணம் இல்லை. ஆனா எதிர்காலத்தில் என்ன நடக்கும்னு ஆருடம் சொல்ல முடியாது. நான் இப்ப மறு மணம் செய்கிற பிளான் எதுவும் இல்லை” என்று மறுத்திருக்கிறார்.












