வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான ஆடுகளம் படத்தில் அறிமுகமானவர் ஜெயபாலன்.கவிதைகளையும், சிறுகதைகளையும் எழுதியுள்ள ஜெயபாலன், சமூக ஆய்வுகளிலும் ஈடுபட்டு வருகிறார்
ஆடுகளம் படத்தில் நடித்ததற்காக தேசிய விருதை வென்ற ஜெயபாலன், தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார்.இந்நிலையில் ‘திடீர்’ உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடந்த மருத்துவ பரிசோதனையில் .அவருக்கு பித்தப்பையில் கல் இருப்பதாக கண்டறியப்பட்டு, எண்டோஸ்கோப்பி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெயபாலனின் குடும்பத்தினர் நார்வே மற்றும் பிரான்சில் வசிப்பதாகவும்,அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது இவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஓமாந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை மண்ணில் பிறந்த ஈழ எழுத்தாளர்களில் முக்கியாமனவர், வ.ஐ.ச.ஜெயபாலன். இவர் டிசம்பர் 13, 1944ஆம் ஆண்டு, இலங்கையிலுள்ள யாழ்ப்பாணம் மாகாணம் உடுவில் என்னும் கிராமத்தில் பிறந்தவர்.
1970ஆம் ஆண்டில் யாழ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படிக்கத்தொடங்கிய அவர், அதில் பட்டம் பெற்றார். படிக்கும் காலத்திலேயே மாணவர் இயக்கங்களில் தீவிரமாக செயல்பட்டார். அதில் இருந்து தொடர்ச்சியாக எழுத்துலகில் பயணித்து வரும் வ.ஐ.ச. ஜெயபாலன், 12 கவிதைகள் மற்றும் சில சிறுகதைகளை எழுதியுள்ளார். சூரியனோடு பேசுதல்(1986), நமக்கென்றொரு புல்வெளி(1987), ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்(1987), ஒரு அகதியின் பாடல்(1991) உள்ளிட்ட பல கவிதை நூல்களை எழுதியுள்ளார்.இயக்குநர் பாலுமகேந்திராவுடன் ஏற்பட்ட நட்பு காரணமாக, பாலுமகேந்திராவின் ஒருவரான வெற்றிமாறன், வ.ஐ.ச ஜெயபாலனை, தனது ஆடுகளம் படத்தில் மிக முக்கிய கதாபாத்திரமான பேட்டைக்காரன் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்.இவரது நடிப்பு பலராலும் பேசப்பட்டது. இவரது வில்லத்தனம், உடல்மொழி ஆகியவற்றுக்காக கடந்த 2011ஆம் ஆண்டு, இந்திய தேசிய விருதுகளில் சிறப்பு நடுவர் விருதை வென்றார்,