கடந்த சில வருடங்களாகவே சிவகங்கையை சேர்ந்த ஒரு தம்பதியினர் தனுஷ் எங்களுடைய மகன் என கூறி வருகிறார்கள். அதுபோக போலீஸாரிடமும் புகார் கொடுத்துள்ளார்கள். கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதைதொடர்ந்து நடிகர் தனுஷ், மதுரை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கஸ்தூரி ராஜா தற்போது அளித்த பதிலில், ” தனுஷ் என் மகன் தான் என்பது நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ளும் அவசியம் இல்லை. இந்த செய்தி எனக்கு மிகவும் மன வருத்தத்தை தருகிறது. திரைத்துறையில் என்னை எல்லோருக்கும் கடந்த 40 ஆண்டுகளாக தெரியும். மேலும் நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும்போது, இதுக்கெல்லாம் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பது கஷ்டமாக உள்ளது” என கூறியுள்ளார்.
இந்நிலையில்,தனுஷ் எங்கள் மகன் தான் என்பதை நிரூபிக்க மரபணு சோதனைக்கு தயார் என திருப்புவனத்தை சேர்ந்த தம்பதி தெரிவித்துள்ளனர். மேலும்,தனுஷ் தங்களுக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று கூறி கதிரேசன், மீனாட்சி தம்பதி தொடர்ந்த வழக்கில் வரும் ஜனவரி மாதம் 12ம் தேதி நேரில் ஆஜராகுமாறு மேலூர் நீதிமன்றம் தனுஷுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இதன் காரணமாக இவ்விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.