பழம் பெரும் நடிகரும் .இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் நெருங்கிய நண்பருமான வி.எஸ். ராகவன் (வயது 90)இன்று மாலை 5-40-க்கு உடல் நலக்குறைவு காரண மாக மரணம் அடைந்தார்.அவரது உடல் தகனம் நாளை நடக்கிறது.எம்,ஜி.ஆர்,சிவாஜி கணேசன்,ஜெமினி கணேசன் முத்து ராமன் ரஜினிகாந்த்,கமல்ஹாசன் மற்றும் இன்றைய இளைய தலைமுறை நடிகர்கள் சந்தானம் கார்த்தி,விஜய் சேதுபதி என மூன்று தலைமுறை நடிகர்களுடன் , ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்துள்ளவர் வி.எஸ். ராகவன். 1925-ல் காஞ்சிபுரம் மாவட்டம் வெம்பாக்கம் கிராமத்தில் பிறந்த வி.எஸ். ராகவன் தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியில் படித்து விட்டு ,அச்சகம் ஒன்றில் வேலை பார்த்தார். அங்கு அவரது நண்பர்களான மாலி,வாதிராஜ்,நடராஜ்,கே.பாலசந்தர் ஆகியோருடன் இணைந்து இந்தியன் நேசனல் ஆர்டிஸ்ட் என்ற ஒரு அமைப்பை உருவாக்கி நிறைய நாடகங்கள் நடித்தார். மாலதி என்ற இதழிலும் துணை ஆசிரியராக பணியாற்றினார். பின்பு நடிப்பின் மீதுள்ள ஆர்வம் காரணமாக 1951-ல் சந்திரிகா என்ற படத்தின் மூலமாக தன் திரையுலக பயணத்தை தொடங்கியவர் தமிழ்த் திரையுலகின் ஜாம்பவான்கள் எம்.ஜி.ஆர்,சிவாஜி,ரஜினி,கமல் மற்றும் தற்போதைய இளைய தலைமுறை நடிகர்கள் விஜய் சேதுபதி,அருள்நிதி என தமிழ் த்திரையுல க நடிகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்துள்ளார். சந்திரிகா,நெஞ்சில் ஒரு ஆலயம், சாரங்கதாரா,பொம்மை,காதலிக்க நேரமில்லை,கர்ணன்,உரிமைக்குரல்,இரு கோடுகள்,ஆயிரம் ஜென்மங்கள்,கல்யாணராமன் , இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா,ஒரு கண்ணியும் மூணு களவானிகளும்உள்பட 1,ooo படங்களுக்கு மேல் குணசித்திரம் ,காமெடி,வில்லன் என பலவித கேரக்டர்களை ஏற்று நடித்துள்ளார்.இவருக்கு திருமனமாகி இரண்டு மகன்களும்.பேரன் பேத்திகளும் உள்ளனர்.சென்னை தி,நகர் ராஜாமுத்தையா பள்ளி அருகே குடும்பத்துடன் வசித்து வந்த வி.எஸ். ராகவன் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக தி,நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5.40 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.அவரது உடல் தி நகரில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.நாளை அவரது உடல் தகனம் நடக்கிறது.வி.எஸ். ராகவனின் உடலுக்கு திரையுலகினர் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.