ஆக்சன் கிங் அர்ஜுன் மகல் ஐஸ்வர்யாவுக்கும் நகைசுவை குணசித்திர நடிகர் தம்பி ராமைய்யா மகன் நடிகர் இயக்குனர் உமாபதிக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 28ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. . பர்மாவில் இருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட 5 காரட் மாணிக்க மோதிரத்தைத் தான் ஐஸ்வர்யாவுக்கு உமாபதி அணிவித்தார் என்றும் அர்ஜுன் அனைத்தையும் பார்த்து பார்த்து தனது மகளுக்காக செய்துள்ளார் என்றும் தெரிவித்தனர்.
இந்நிலையில்,இவர்களது திருமணம் வரும் ஜூன் 9 ,தேதி மாப்பிளை அழைப்பு அதை தொடர்ந்து 10ம் தேதி கெருகம்பாக்கத்தில் உள்ள அர்ஜுனின் தோட்டத்தில் உள்ள கோவிலில் திருமணம் பிரம்மாண்டமாக நடக்க உள்ளது தொடர்ந்து 14 ஆம் தேதி சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்க உள்ளது.. இந்நிலையில் அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலருக்கும் அழைப்பிதழ் வைக்கும் பணியை இரு குடும்பத்தாரும் தொடங்கியுள்ளனர் ,
இன்று காலை 10-30 மணிக்கு நடிகர் அர்ஜுன் மற்றும் தம்பி ராமையாவின் குடும்பத்தினர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கி திருமணத்திற்கு அழைப்பு விடுத்தனர் தொடர்ந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட திரையுலக நட்சத்திரங்களுக்கும்,பிரபங்களுக்கும் அழைப்பு விடுக்க உள்ளனர்.












