தமிழ்த்திரையுலகில் ‘காதல் கொண்டேன்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான சோனியா அகர்வாலுக்கு ‘7ஜி ரெயின்போ காலனி’ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுக்கொடுத்தது. இந்நிலையில் இயக்குனர் செல்வராகவனுடனான திருமணம், அதை தொடர்ந்து விவாகரத்து போன்ற விவகாரங்களினால் பட வாய்ப்புகள் குறைந்து போனது. இதையடுத்து சின்னத்திரை மற்றும் ‘வெப்’ தொடர்களில் நடித்து வந்த சோனியா அகர்வால், தற்போது ஹாரூன் இயக்கத்தில் உருவாகி உள்ள 7ஜி என்ற படத்தில் நடித்துள்ளார். இதில், சோனியா அகர்வால், ஸ்மிருதி வெங்கட், சித்தார்த் விபின் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.
சிதார்த் விபின் இசையமைத்துள்ள இப்படம் ஹாரர், திரில்லர் பணியில் உருவாகி உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.இந்த டிரைலரில் , அமானுஷ்யம் நிறைந்த 7ஜி அபார்ட்மெண்டில் குடியேறும் ஸ்மிருதி வெங்கட்டுக்கு அந்த வீட்டில் இருக்கும் அமானுஷ்யத்தால் என்னவெல்லாம் நடந்தது என்கிற ஆவலை இப்படத்தின் டிரைலர் ஏற்படுத்தி உள்ளது.