மில்லியன் டாலர் மூவிஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கௌதம்V.R. இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 7 நாட்கள். 2016 ஏப்ரல் மாதம் இப்படத்திற்க்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு பெயர் வைக்கப்பட்டது. இயக்குனர் P.வாசுவின் மகன் சக்தி மற்றும் நிகிஷா பட்டேல் ஜோடியாக நடிக்கும் இப்படத்தில். பிரபு, நாசர், கணேஷ் வெங்கட்ராமன், M.S. பாஸ்கர் போன்றோர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு அப்புச்சி கிராமம் படத்தில் ஹிட் குடுத்த விஷால் சந்திரசேகர் இசையமத்துள்ளார். M.S.பிரபு ஒளிப்பதிவு செய்துள்ளார். படபிடிப்பு முடிக்கப்பட்டு வெளிவர காத்திருக்கும் நிலையில் படத்தின் ஒரு பாடலை படக்குழு வெளியிட முடிவு செய்து நேற்று வெளியிட்டுள்ளது.
இப்படத்தில் மதன் கார்க்கியின் வரிகளில், டி. ராஜேந்தர் பாடிய பாடல்‘புடிச்சிருக்க பெண்ணே சொல்லிபுடு‘. நேற்று இப்பாடலின் வெளியீட்டு விழா பிரபல வானொலி நிலையமான Big FM –ல் வைத்து நடைபெற்றது. படத்தில் நடித்த சக்தி, கணேஷ் வெங்கட்ராமன், இயக்குனர் கௌதம் V.R., இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் மற்றும் டி. இராஜேந்தரும் கலந்து கொண்டனர். Big Fm-ல் வைத்து நடைபெற்ற இவ்விழாவில் பாடலை பாடிய டி. இராஜேந்தர் அவர்கள் பாடலை வெளியிட்டார்.