கவுதம் மேனன் இயக்கத்தில்,அஜீத் ,திரிசா .அனுஷ்கா ஆகியோர் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 5ஆம் தேதிவெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது இப்படத்திற்கு ஏற்கனவே தணிக்கை குழுவினர் யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதன் காரணமாக வரிவிலக்கு கிடைக்காத சூழ்நிலை உருவாகியது.அதே சமயம் , பெரும் தொகைக்கு இப்படத்தை படத்தயாரிப்பாளர் விலை பேசி வருவதால் விநியோகஸ்தர்ளிடையே வரிவிலக்கு கிடைப்பதில் உள்ள சிக்கலை எண்ணி தயங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக ரிவைசிங் கமிட்டிக்கு சென்று யு சான்றிதழ பெறும்முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில், ரிவைசிங் கமிட்டியில் இந்த படத்தைப் பார்த்த அதிகாரிகள் ‘என்னை அறிந்தால்’ படத்திற்கு கொடுக்கப்பட்ட யூ/ஏ சர்டிபிகேட்டை உறுதி செய்துள்ளனர். அஜீத்தின் முந்தைய இரண்டு படங்களான வீரம், ஆரம்பம் ஆகிய இரு படங்களும் ‘ யூ’ சான்றிதழ் பெற்ற நிலையில்,என்னை அறிந்தால் படத்திற்கு மட்டும் யூ/ஏ சான்றிதழ் கிடைத்திருப்பது படக்குழுவினர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அஜீத், அனுஷ்கா,த்ரிஷா, அருண்விஜய், விவேக் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். கவுதம் மேனன் இயக்கியுள்ள இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார்.












