தயாளன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் படங்களை இயக்கியவர் இயக்குனர் ஆண்டனி மித்ரா தாஸ். தன்னுடய முதல் படத்தில் பி.யு. சின்னப்பாவை இயக்கிய இவர் பின் இரண்டாம் உலக போரில் ஒரு வீரராக தன் பங்கை ஆற்றினார் பின்னர் மீண்டும் திரையுலகிற்கு வந்த இவர், பிழைக்கும் வழி, பால்யசகி, அவகாசி, மலையாளத்தில் ஹரிசந்திரா போன்ற வெற்றி படங்களை இயக்கினார்.
இவர் கடைசியாக 1960ம் ஆண்டு தியாகராஜ பாகவதர் நடிப்பில் வெளியான சிவகாமி படத்தை இயக்கினார். பின் நீண்ட நாட்களாக சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர் 57 ஆண்டுகள் கழித்து தற்போது முதலாம் உலகப் போரை மையமாக கொண்ட படம் ஒன்றை இயக்க முடிவு செய்திருந்தார். தன்னுடைய 104 வயது வரையிலும் அயராது உழைத்த இவர் நேற்றுஇரவு காலமானார். மேலும் இவரது கன்கள் தானம் செய்யப்பட்டு தற்போது அவரது உடலும், ராமசந்திரா மருத்துவ ஆராய்ச்சி கழகத்திற்கு தானம் அளிக்கப்பட்டது.












