
ஒரு நடிகை என்ற இமேஜை பார்க்காமல் தனக்கு நடந்த கொடுமையை வெளி உலகத்திற்கு எடுத்து சொன்ன நடிகை பாவனாவிற்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில்,ஒரு சில நடிகைகளும் தனக்கு நடந்த சில கொடுமைகளை வெளியே சொல்ல ஆரம்பித்திருக்கின்றனர்.இந்நிலையில்,நடிகை ரெஜினா கசாண்ட்ரா பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ரெஜினா, “சுற்றி இருப்பவர்களை நம்பித்தான் நாம் வேலை செய்கிறோம். அவர்களே குற்றவாளியாக மாறுவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இது பெரிய விவகாரம், இது குறித்து பேசும் அளவிற்கு எனக்கு முதிர்ச்சி இல்லை. என்றாலும் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அவர்களை தூக்கில் போட்டாலும் தப்பில்லை. அவர்களுக்கு கொடுக்கிற தண்டனையை பார்த்து இன்னொருவருக்கு அந்த தவறை செய்ய துணிவு வரக்கூடாது.நான் அறிமுமானது தமிழ் படத்தில்தான். அப்போது நான் பெரிய நடிகை இல்லை. போனிலேயே நடிக்க கூப்பிடுவார்கள். அப்படி போனில் அழைத்த ஒருவர் எல்லாம் பேசி முடித்த பிறகு தயங்கியபடி “அட்ஜெஸ்மெண்ட் பண்ணிக்குவீங்களா” என்று கேட்டார். அப்போது எனக்கு அதன் பொருள் தெரியாது. பின்னர்தான் தெரிந்து கொண்டேன். அதன் பிறகு எனக்கு அப்படிப்பட்ட அழைப்புகள் வரவில்லை. ஒருவரிடம் கதை கேட்பதாக இருந்தால்கூட அவரது பின்னணியை தெரிந்து கொண்டுதான் கேட்பேன். நாம் கவனத்துடன் இருந்தால் யாருடைய உதவியும் தேவையில்லை. கவனமாக இருப்பதுதான் நம்மை பாதுகாத்துக் கொள்ளும் முதல் ஆயுதம்.என்று கூறினார்












