1983ம் ஆண்டு இயக்குனர் பாக்யராஜ் நடித்த முந்தானை முடிச்சு படத்தின் மூலம் காமெடி நடிகனாக அறிமுகமாகி அனைவரையும் சிரிக்க வைத்த காமெடி நடிகர் சிட்டிபாபு என்ற தவக்களை {வயது 42} இன்று காலை வடபழனி ஆதிமூல பெருமாள் கோவில் தெருவில் உள்ள தனது இல்லத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவருக்கு போதுமணி என்ற மனைவி இருக்கிறார். குழந்தைகள் கிடையாது.சொந்த ஊர் நெல்லூர். நெல்லூரில் அம்மா மற்றும் தங்கை ஆகியோர் இருக்கிறார்கள்.இதுவரை 67 படங்களில் நடித்த அவர் தற்போது தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார்.
நேற்று முன்தினம் கேரளாவில் ஒரு மலையாளப் படத்தில் நடித்துவிட்டு விட்டுக்கு வந்தவர், இன்று காலை தூங்கி எழுந்த உடன் வாந்தி எடுத்துள்ளார். அவரது மனைவி தண்ணீர் கொடுக்க குடித்த பின், திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரமடைந்தார். .நாளை காலை 1௦ மணிக்கு ஏ.வி.எம் சுடுகாட்டில் இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளது.