கோட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தனது கடைசிபடமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார்.இதில் பூஜா ஹெக்டே கதாநாயகியாகவும்,, பாபி தியோல் வில்லனாகவும் நடிக்கிறார்கள்.மேலும் மமிதா பைஜூ உள்ளிட்டோரும் முக்கியமான வேடங்களில் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்க கேவிஎன் நிறுவனம் இப் படத்தை தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 70 சதவீதம் நிறைவடைந்திருக்கிறது.இந்நிலையி
இப்படத்துக்கு ‘ஜன நாயகன்’ என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் விஜய் படு மாஸாகவும், ஸ்டைலாகவும் இருக்கிறார்.விஜய்யின் அரசியல் பயணத்துக்கும் வலு சேர்க்கும் விதமாக படத்தின் பெயர் அமைந்திருப்பதாகவும் நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். இப் படம் வரும் அக்டோபர் மாதத்திலேயேவெளியாகவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்த நிலையில்,இப் படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதத்திற்குள் ஒட்டுமொத்தமாக நிறைவடையவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள தமிழகத்தின் சட்டமன்ற தேர்தலை கவனத்தில் கொண்டு, அடுத்த ஆண்டு பொங்கல் அல்லது கோடைக் கொண்டாட்டமாக ஜன நாயகன் படம் வெளியாகவுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படம் அரசியலை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












