திரைப்பட பாடகி சுசித்ரா கார்த்திக், தன்னுடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், அந்தரங்க புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.
நடிகர், நடிகைக்குள் இருக்கும் சண்டையை சமூக வளைத்தளம் மூலம், இளைஞர்களை வக்கிர எண்ணத்தை தூண்டும் வகையில் புகைப்படம், வீடியோகளை பதிவு செய்வது கண்டிக்க தக்க செயலாகும்.
நடிகர், நடிகைகளை சமூக வளை தளங்களில் பின்பற்றக்கூடிய ரசிகர்கள், இளைஞர்கள் இருப்பார்கள்.
நடிகர்,நடிகைகளின் சேட்டைத்தனத்தால், இளைஞர்கள் வழிதவற வாய்ப்பாக அமைந்துவிடும்.
ஆகவே காவல் துறை ஆணையர் அவர்கள், நடிகை சுசிதரா கார்த்திக் மீது சட்டநீதியான நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என, இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பாக அதன் தலைமை நிலைய செயலாளர் ரசூல்மைதீன், காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர்.