‘டர்ம் புரொடக்ஷன்ஸ்’ எஸ். உமா மகேஸ்வரி தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய படம்,’ட்ராமா’ . அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விவேக் பிரசன்னா, பூர்ணிமா ரவி, ஆனந்த் நாக், சாந்தினி தமிழரசன், நிழல்கள் ரவி, மாரிமுத்து, பிரதோஷ், வையாபுரி, ரமா, நமோ நாராயணன், பிரதீப் கே. விஜயன், ‘ஸ்மைல்’ செல்வா, மதனகோபால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அஜித் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவை கவனிக்க. ராஜ் பிரதாப் இசையமைத்திருக்கிறார் . மெடிக்கல் கிரைம் திரில்லராக உருவாகி இருக்கும் இப்படத்தின் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடந்தது இந்நிகழ்வில் படக்குழுவினருடன் நடிகர் ‘டத்தோ’ ராதா ரவி, இயக்குநர் கே . பாக்யராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி , இயக்குநர்கள் ராகவ் மிர்தாத், வெற்றி, நடிகர் லிங்கா உள்பட பலர் கலந்து கொண்டனர். நடிகர் ராதாரவி பேசுகையில், ” நடிகர்களுக்கு அடையாளம் என்பது முக்கியம். தற்போது கூட என் தந்தையார் எம் ஆர் ராதாவை பற்றி பல விஷயங்களை பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள். சரியோ தவறோ பேசுகிறார்கள். நமக்கு மரியாதை கொடுத்தால் தான் மரியாதை கொடுப்போம். சினிமாக்காரர்கள் யாரும் தரக்குறைவானவர்கள் அல்ல. இன்றைக்கும் அவர்களுக்கு வாடகைக்கு வீடு தர மறுக்கிறார்கள். இயக்குநர் தம்பிதுரை மாரியப்பனை பற்றி மற்றவர்கள் பேசும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நான் சினிமாவில் அறிமுகமாகி 51 வருடங்கள் ஆகின்றன. நான் நடிப்பதற்கு மட்டும் தான் லாயக்கு, என் சகோதரர் கமல் ஹாசனை போல் என்னால் இருக்க முடியாது. ஏனெனில் எனக்கு ஏகப்பட்ட ‘வெளி’ வேலைகள் இருக்கின்றன. இப்படத்தில் நடிக்க முடியவில்லையே என்ற வருத்தம் உள்ளுக்குள் இருக்கிறது. இங்கு படத்தின் மூலம் டிஸ்ட்ரிபியூட்டர் கூட அறிமுகமாகி இருக்கிறார். அவருக்கும் இனி சிறந்த எதிர்காலம் உண்டு. தற்போது சினிமா எடுப்பதும் எளிது, சினிமாவில் நடிப்பதும் எளிது, வெளியிடுவது தான் கஷ்டம். பொதுவாக படத்தை வெளியிடுவது தான் எளிதாக இருக்க வேண்டும். ஆனால் தற்போது அதுதான் கடினமானதாக இருக்கிறது. தற்போது படத்தை வெளியிடுவதற்கும் அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது. முன்பெல்லாம் 25வது நாள், ஐம்பதாவது நாள், நூறாவது நாள் என்று படம் வெற்றி பெறும். ஆனால் தற்போது படம் வெளியாகி மூன்றாவது நாளிலேயே ‘வெற்றிகரமான மூன்றாவது நாள் ‘ என போஸ்டர் வெளியிடப்படுகிறது. இந்தப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடினால் தான் தமிழ் சினிமாவுக்கு நல்லது. குறைந்தபட்சம் பத்து நாட்களாவது இந்த திரைப்படத்தை வெற்றி பெறச் செய்யுங்கள்,” என்றார்.