நடிகர் கமல்ஹாசனின் மூத்த சகோதரர் சந்திரஹாசன் (வயது82) கமல்ஹாசன் நடிப்பில் பல்வேறு திரைப்படங்களை தயாரித்த ராஜ் கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்தை நிர்வகித்து வந்த சந்திரஹாசன்(82), நேற்று இரவு லண்டனில் உள்ள தனது மகள் நடிகை அணு ஹாசன் வீட்டில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.1936-ம் ஆண்டு பிறந்த சந்திரஹாசன் வழக்கறிஞர் பட்டம் பெற்றவராவார்.கடந்த ஜனவரி மாதம் சந்திரஹாசனின் மனைவி கீதா மணி, கடந்த ஜனவரி மாதம் சென்னையில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது . மறைந்த சந்திரஹாசனுக்கு அனுஹாசன், நிர்மல் ஹாசன் என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளன. நிர்மல் ஹாசன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். தந்தையின் மரணத்தை அடுத்து நிர்மல் ஹாசன் அமெரிக்காவில் இருந்து லண்டனுக்கு விரைந்து உள்ளார். சந்திரஹாசன் மரணத்திற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.