வாரிசு அரசியல் தமிழகத்தில் வரலாற்று பெருமை உடையதாகும் . வெற்றியும் தோல்வியும் சமநிலையில் இருந்து கொண்டிருக்கிறது.
வாரிசு அரசியலை வைது கொண்டே மறைமுகமாக வாழ்த்துப் பா வாசிக்கிற திருட்டுத்தனமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
அரசியலுக்கு மட்டுமா வாரிசு அரசியல் ?
திரை உலகத்தில் கிடையாதா ?
அங்கேதான் ஆபத்து காத்திருக்கிறது. வாரிசு ஆவது சுலபம் இல்லை?
உலகநாயகன் கமல்ஹாசனிடம் முன்னொரு தடவை கேட்கப்பட்ட கேள்வி இது.!
“அடுத்த கமல்ஹாசன் என்று யாரை சுட்டிக்காட்டுவீர்கள்?”
இதற்கு அவர் கடுமையாக பதில் சொன்னார்.
“பாவம் ,அந்த நிலைக்கு யாரும் ஆளாகக் கூடாது. அடுத்த சிவாஜி கணேசன் என்று என்னை யாராவது சொன்னால் .. அதை நானும் விரும்பமாட்டேன். நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் விரும்பி இருக்கமாட்டார்.
சிவாஜி என்னை ரசிக்கிறார் என்பதுதான் எனக்குப் பெருமை.
இன்னொரு கமல்ஹாசனை தேடாதீங்க !என்னை விஞ்ச வேண்டியது அடுத்த தலைமுறையின் கடமை.!”என்று நெற்றிப்பொட்டில் அடித்து சொன்னார். சரிதான் !












