காற்றைப் பிடித்து கயிறு திரிக்கிற கில்லாடியாக இருப்பார் போலிருக்கிறது, பின்னணிப் பாடகி சின்மயி.
வயிறு நிறைய சோத்தை தின்னுட்டு சாப்பாடு போட்ட புண்ணியவானையே கஞ்சன்னு சொன்னா அடுத்த வேளை சோத்துக்கு சிங்கிதான் அடிக்கணும் !
தக் லைப் பட ஆடியோ விழாவில் “முத்த மழை”பாடலை பாடுவதற்கு வாய்ப்பு கொடுத்தவர் உலகநாயகன் கமல்ஹாசன். பாடகி தீ பாடிய அந்த பாடலை பெரிய மனசுடன் மேடையில் பாட அனுமதி கொடுத்தவர் இசைப்புயல் ஏஆர் ரகுமான்.
இன்னொரு பாடகி பாடிய பாடலை நகலெடுத்துப் பாடியவர் சின்மயி. சிறப்பாகவே இருந்தது. பாராட்டுகள் குவிகின்றன இன்னமும். !
ஆனால் சின்மயி செய்த பெருந் தவறை மறந்து ,மன்னித்து மேடை கொடுத்தவர் கமல்ஹாசன். இந்த அருஞ்செயல் செய்தவர் மீதுதான் முன்னர் சேற்றை அள்ளி வீசி இருக்கிறோம் என்கிற குற்ற உணர்வு கண்டிப்பாக உறுத்தி இருக்க வேண்டும்.
“டெல்லியில் மல்யுத்த பெண் மணிகளுக்காக குரல் கொடுத்த கமல்ஹாசன் பாலியல் சீண்டல் பற்றி நான் கண்டனம் தெரிவித்தபோது வாய் பேசாது இருந்தது ஏன்? நண்பர் என்பதாலா ?” என்று கொந்தளித்திருந்தார் அன்று.
அவர் நண்பர் என சொல்லியிருந்தது கவிப்பேரரசு வைரமுத்துவை.!
தெளிவில்லாத குற்றச்சாட்டு ,ஆதாரம் இன்றி அவதூறு , நச்சுக் கருத்துகளை நயவஞ்சகம் கலந்து சொல்கிறார் என்கிறபோது எப்படி மற்றவர்கள் குரல் எழுப்ப இயலும்?
கவிப்பேரரசு மீது அவதூறு சொன்னதற்கு பின்னர்தான் அவர் இங்கு செல்லுபடியாகவில்லை. தற்போது சின்மயியின் ‘சின்’ பார்வை நயன்தாரா குடும்பம் மீது பாய்ந்திருக்கிறது.
ஜானி மாஸ்டர் தெலுங்கிலும் பிற மொழியிலும் நடனக் காட்சிகளை அமைத்து வந்தார். அவர் மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக வந்த புகாரில் கடந்த ஆண்டு கைது செய்யப் பட்டார் ,இந்த வழக்கு விசாரணையில்இருக்கிறது. ஜாமீனில் வந்திருக்கிற ஜானி மாஸ்டரை புகழ்ந்து நயன்தாராவின் கணவர் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
எல்.ஐ.கே படத்தில் நடன இயக்குநராக பணியாற்றியுள்ள ஜானி மாஸ்டரின் புகைப்படத் துடன் ” எல்.ஐ.கே டீம் உங்களையும் உங்கள் வைபையும் நேசிக்கிறது ”
“இந்த மாதிரி திறமையான குற்றவாளிகளை நாம் தொடர்ந்து புரமோட் செய்து அதிகாரத்தில் உட்கார வைக்கிறோம். அதனால்தான் அந்த குற்றவாளி தன்னை எதுவும் செய்யமுடியாது என பாதிக்கப்பட்ட பெண்கள் முன் கர்வமாக சுற்றுகிறான். ஸ்வீட் ‘
விக்னேஷ் சிவனை விமர்சித்து தனது எக்ஸ் பக்கத்தில் சின்மயி இப்படியாக பதிவிட்டுள்ளார்.
வெட்கமாக இருக்கிறது.!












