![]()
“75 வயசு ஆச்சு . கருப்புக் கண்ணாடி போட்டுக்கிட்டு ஸ்லோ மோஷன்ல நடந்திட்டு இருக்கேன்” என்று தன்னைத்தானே கிண்டலுடன் சொல்லிக்கொண்டாலும் ,அதில் ஒரு பெருமை இருக்கத்தான் செய்கிறது. . இது ஒரு வகையில் கர்வம் என்றாலும் தப்பில்லை. சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் மத்தியில் செருக்கு இருக்கவே செய்யும்.
ஜெயிலர் 2 -க்கு பின்னர் ஓய்வு எடுப்பார் என்று சிலர் ஆருடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதை தகர்க்கும் வகையில் வேறு ஒரு தகவல் . அதாவது அவருக்கு ஓய்வில்லை புதிதாக படம் செய்யப் போகிறார் என்கிறார்கள்.
குரங்கு பொம்மை ,மகாராஜா ஆகிய படங்களின் இயக்குநர் நித்திலன் சாமிநாதன் தான் ரஜினியை இயக்கப்போகிறாராம் ,
மகாராஜா வெளியானதும் நித்திலனை அழைத்து ரஜினி பாராட்டியதை வைத்து இப்படி ஒரு தகவல் வெளியாகியதா?
இருக்கலாம் ,ஆனால் அந்த படத்தைத் தயாரிப்பது ரெட் ஜெயண்ட் என்கிறார்கள். உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆனதும் தயாரிப்புப் பணியில் இருந்து விலகி இருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரிப்பில் இறங்குகிறது என்கிறார்கள்.
கூலி, ஜெயிலர் என இரண்டு படங்களை சன் நிறுவனம் தயாரித்து வெளியிடுகிறது. தற்போது ரெட் ஜெயண்ட் கை மாறி இருக்கிறது.












