SK ஸ்டியோஸ் தயாரிப்பில் நீண்ட பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாராகும் படம் “வலியவன்”.
“எங்கேயும் எப்போதும்”, “இவன் வேற மாதிரி” போன்ற படங்களை இயக்கிய சரவணன் இப்படத்தை இயக்குகிறார்.
கதாநாயகனாக ஜெய் மற்றும் கதா நாயகியாக ஆண்ட்ரியா நடிக்கின்றனர். இவர்களுடன் அழகம் பெருமாள், “பண்ணையாரும் பத்மினியும்” பாலா உள்பட பலர் நடிக்கின்றனர்.இப்படத்தின் கதை,திரைக்கதை வசனம் எழுதிஇயக்கி வரும் சரவணன் கூறியதாவது,
படத்தின் தலைப்புகேற்றவாறு தன்னை காண்பிக்கவும், படத்தின் கதாபாத்திரத்தின் தன்மைக்கு தேவைப்பட்டதற்காகவும், ஜெய் சுமார் 6 மாதங்களுக்கும் மேல் உடற்பயிற்சி மேற்கொண்டார். ஹாங்காங்கில் இருந்து ஒரு சிறப்பு உடற்பயிற்சியாளரை வரவழைத்து அவரின் வழிகாட்டுதலில் மிகவும் சிரமப்பட்டு உணவு ,பழக்கவழக்கங்களை மாற்றி அதன் மூலம் தன் உடலை முறுக்கேற்றி ‘சிக்ஸ் பேக்’ ஆக மாற்றியுள்ளார்.
அதே போல்,, வலியவன் படத்தின் டப்பிங்கை தொடர்ந்து 24 மணிநேரத்தில் முடித்து கொடுத்துள்ளார்.என்கிறார்.சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் படத்தின் படபிடிப்புகள்நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.ஓளிப்பதிவு – B. தினேஷ் கிருஷ்ணன்,இசை – டி.இமான்