
கற்பனைகள் கணநேரத்தில் உலகை சுற்றி வந்துவிடும்.அதற்கு அளவீடு எதுவும் இல்லை.!
அதனால்தானோ என்னவோ கனவு இல்லமான சினிமாவிலும் கற்பனைகளுக்கு வறட்சி வருவதில்லை, இங்கு பசுமையாக இருப்பது கற்பனைதான்.
தலைவர் 173 .கதாசிரியர் இயக்குநர் சுந்தர் .சி இந்த கூட்டமைப்பில் இருந்து தன்னிச்சையாக வெளியேறிய பிறகு ஈசல் பறப்பது மாதிரியாக வதந்திகள் வானில் பறந்தன.
“தலைவர் 173.இது அவருடைய படமுங்க.நான் மட்டும் தனியாக முடிவு எடுக்க முடியாது.நாங்கள் இருவரும் சேர்ந்து முடிவு எடுக்க வேண்டும்.நல்ல குவாலிட்டியான கதை பரிசீலனையில் இருக்கிறது.விரைவில் அப்டேட் எதிர்பாருங்கள் “என்று உலகநாயகன் கமல்ஹாசன் அறிவித்திருக்கிறார். நம்பிக்கையுடன் காத்திருப்போம்.
இந்த அறிவிப்புடன் இன்னொரு தகவலை இணைத்துப் பார்க்கவும் தோன்றுகிறது.
பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் ஆர்.கே.எப்.ஐ -யில் இணைந்து இருக்கிறார் என்பதுதான் அந்த தகவல். சிம்புவை இயக்குவதாக இருந்த ராம்குமார் பாலகிருஷ்ணன் அமலாக்கத்துறையின் சோதனையினால் டான் பிக்சர்சில் இருந்து வெளியே வரவேண்டியதாகிவிட்டது . ஆக அந்த இடைவெளியை உலகநாயகனுக்கு கொடுத்து விட்டதாக சொல்கிறார்கள். எந்த அளவுக்கு உண்மை என்பது அதிகார பூர்வமான அறிவிப்பில்தான் தெரிய வரும்.
இதற்கிடையில் கமல்ஹாசன் குஷ்பு ,சுகாசினி மணிரத்னம் மூவரும் கோவா சென்று திரும்புகையில் விமான நிலைய பஸ்ஸில் பயணித்த புகைப்படங்களை வெளியிட்டு சிலர் புதிதாக கதை கட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். சமரச பேச்சு சக்சஸ் என்கிறார்கள். கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கில் உதிப்பது எவ்வளவு சாத்தியமோ அந்தளவுதான் இந்த சக்சஸ் கற்பனையும்.! சுந்தர்சி மீது சூப்பர் ஸ்டார் கடுமையான கோபத்தில் இருக்கிறார் . வெறுத்துப் போயிருக்கிறார் என்கிறபோது இது எப்படி சாத்தியப்படும்?












