ஒரு பக்கம் புயலும் மழையும் .மற்றொரு பக்கம் திடுக்கிடும் செய்திகள். இப்படியாக திங்கள்கிழமை பொழுது கடந்தது.
அண்மையில் மலையாள மனோரமாவின் புதிய பதிப்பு தொடர்பான நிகழ்ச்சிக்கு முக்கிய விருந்தாளியாக அழைக்கப்பட்டவர்கள் உலக நாயகன் கமல்ஹாசனும் ,நடிகை மஞ்சு வாரியரும் ஆவார்கள்.
அந்த விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தியவர்களில் ஒருவர் கமல்ஹாசனின் ஓய்வு பற்றியும் பேசினார்.
எத்தகைய கேள்விகள் வந்தாலும் எதிர்கொள்ளக்கூடியவர் கலைஞானி என்பது உலகு அறிந்த விடயம்..
புன்னகைத்தவாறே தனது பதிலை ,அதாவது கருத்தை அழுத்தமாக பதிவு செய்தார் அங்கே .கமல்ஹாசனின் கருத்துக்கு அரங்கமே கையொலி எழுப்பி வரவேற்றது.
“இன்றைய இளைய சமுதாயம் ‘நியு காம்பினேசன் ‘வரவேண்டும் என்று கருதுகிறது. ” என்ற கமல் ‘காம்பினேஷன் ‘ என்கிற சொல்லை பயன் படுத்தினார். அதாவது கலவை என பொருள் கொள்ளலாம் .பழமையும் புதுமையும் கலந்த கலவை என்பது அதன் விரிவாக்கம். தொடர்ந்து “புதுமை என்பது அவசியம்”என்றார்.
“யாரும் என்னை ஓய்வு பெறும்படி சொன்னதில்லை. ஆனால் சில படங்கள் வெற்றியை தவற விடுகிறபோது எனக்கு ‘போதுமே’ என்று தோன்றும். அத்தகைய படங்கள் வெளியான பிறகு எனது நண்பர்கள் ‘நடிப்பதை நிறுத்தி விடாதே !சிறந்த படங்களை கொடுத்துவிட்டு பிறகு முடிவு எடுக்கலாம் “என்று சொன்னார்கள்..நான் அந்த சிறந்த படத்தை கொடுப்பதற்காக தொடர்ந்து நடித்து வருகிறேன்,i am still pursuing one such film” என்று தனது முடிவினை அந்த அரங்கத்தில் பதிவு செய்தார் உலகநாயகன் .
‘ஆகச் சிறந்த படம் ‘வெளியாகும்வரை நம்மவர் கமல்ஹாசன் வெள்ளித் திரையில் மின்னிக்கொண்டுதான் இருப்பார். ஆஸ்கார் கைக்கு வரவேண்டும்.அவரது ரசிகர்கள் நிம்மதியாக இருக்கலாம்.












