
தமிழ்நாடே ஆவலுடன் த வெ.க. தலைவர் விஜய் என்ன சொல்லப்போகிறார் என்பதை எதிர்பார்த்துக் கிடக்கிறது.
அரசியல் ஏரியாவில் பரபரப்பு. ஒரு பக்கம் தர்ம யுத்தம் நடத்திய முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தன்னுடைய ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயத்தில் ஐக்கியமாகிவிட .இன்னொரு பக்கம் த,வெ.க.தலைவர் விஜய்க்கு மனைவி சங்கீதா ஜோசப் விஜய் டைவர்ஸ் நோட்டிஸ் விட்டு டைம் பாம் வெடித்திருக்கிறார்.
“தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’ என முழக்கமிட்டீர்களே ,உங்க மனைவிக்கே பாதுகாப்பு இல்லாம போயிருச்சே சார்”என்று திமுகவினர் கிண்டலடிக்கிறார்கள்.
சங்கீதா டைவர்ஸ் நோட்டிஸ் விடுவதற்கு முன்னாள் ஒரு சம்பவம் நடந்திருப்பதாக சில ஊடக நண்பர்கள் சொல்கிறார்கள்.
என்னவாம் ?
நீதிமன்றத்துக்கே வராமல் சட்டப்படி ஒரு தீர்வை எட்ட சங்கீதா முயன்றதாகச் சொல்லப்படுகிறது.
டிசம்பர் முதல் வாரத்தில், தமிழ்நாடு மகளிர் ஆணையத்தை சங்கீதா அணுகியிருந்தார் என்றும், அவரின் முறையீட்டின் பேரில் விஜய்யை விசாரணைக்கு அழைத்ததாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால், அந்த ஆணையத்தின் அழைப்பை நிராகரித்த விஜய், “என்னால் வர முடியாது, உங்களால் ஆனதைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டாராம்.அதன் பின்னர்தான் நீதிமன்றம் செல்லும் முடிவை சங்கீதா எடுத்தார் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.












