கடந்த பொங்கல் பண்டிகைக்கு இப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சென்சார் கிடைக்காததால் இதுவரை வெளியாகவில்லை.நீண்ட போராட்டத்திற்கு பின் ஜனநாயகன் படத்தை மறுதணிக்கை செய்ய தணிக்கை வாரியத்திற்கு படத் தயாரிப்பு நிறுவனம் படத்தை அனுப்பியது. விரைவில் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 30 வரை ஜனநாயகன் படம் வெளியாக வாய்ப்பில்லை எனக் கூறப்பட்டு வரும் நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் தவெக தலைவர் விஜய், தனது ஜனநாயகன் படத்திற்கு கூட்டு சேர்ந்து பிரச்சினை ஏற்படுத்துகிறார்கள் என குற்றஞ்சாட்டியிருந்தார்.இந்நிஇந்நிலையில் சமூக வலைதளத்தளங்களில் சட்டவிரோதமாக பகிரப்படும் ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்யவோ பகிரவோ வேண்டாம் அப்படி செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனநாயகன் தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது இதற்கிடையே தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது எக்ஸ் பக்கத்தில், “ஜனநாயகன் திரைப்படத்தின் அறிமுகக் காட்சி, கிளைமாக்ஸ் காட்சி உள்ளிட்ட பல காட்சிகள் இணையத்தில் லீக் ஆகியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தேன். இப்போது முழுத் திரைப்படமும் லீக் செய்யப்பட்டிருப்பதாக பலர் ட்வீட் செய்து வருகின்றனர். இது மிகுந்த வருத்தமளிக்கிறது. இதற்குப் பொறுப்பானவர்கள் யாராக இருந்தாலும், இது கண்டிக்கத்தக்கது மற்றும் அநியாயமானது. கேவிஎன் நிறுவனம் உடனடியாக நீதிமன்றத்தை நாடி லட்சக்கணக்கான மக்கள் படத்தைப் பார்ப்பதற்கு முன்பும் இது போன்ற அனைத்து லிங்குகளையும் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திரைப்படத்தைச் சுற்றி இதுபோன்ற ஆபத்துகள் இருப்பதால், சினிமா வியாபாரம் மிகவும் ஆபத்தானதாகவும், கணிக்க முடியாததாகவும் மாறி வருகிறது. விஜய்யின் கடைசிப் படத்தை இன்னும் எவ்வளவு தான் குறிவைப்பீர்கள்???” என்று பதிவிட்டுள்ளார்.












