
அல்டிமேட் ஸ்டார் அஜீத்தின் அடுத்தபடம் யாருக்கு?
ஆதிக் ரவிச்சந்திரன் டைரக்ட் பண்ணுவார் என்று வந்த செய்தியையும் அஜித் தரப்பு மறுக்கவில்லை. அவர்தான் இயக்கப்போகிறார் என்பதை உறுதி செய்தார்கள்.
ஆனால் ஒன்றரை ஆண்டுகாலம் ஸ்டுடியோ பக்கமே அவர் வரவில்லை.கார் ரேஸ் தான் அவரது அஜண்டாவில் தனித்த இடத்தை பிடித்து வைத்திருந்தது.
இதனால் மீடியாக்கள் தங்களின் கற்பனை வளத்துக்கு ஏற்ப கதை சொல்லி வந்தன.
சத்ய ஜோதி, வேல்ஸ் ,மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகியோர் ஊதிய பிரச்னையினால் பின்வாங்கி விட்டதாகவும் செய்திகள் வந்தன.
ஆனால் அஜித்தின் சொந்த தயாரிப்பில்தான் அடுத்தபடம் வரவிருக்கிறது என்கிற சேதியை அவரின் நண்பர்களே சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
அடுத்தபடத்தின் வேலைகள் தொடங்கிவிட்டன.லோகேசன் தேர்வு ஆர்ட்டிஸ்ட் செலெக்ஷன் ,கால்ஷீட் தேதிகள் என பரபரப்பாகி விட்டதாக் சொல்கிறார்கள்.
இந்த முடிவுக்கு அஜித் வந்தது எதனால் என்றால் பயங்கரமான காரணத்தை சொல்கிறார்கள்.இவரது வளர்ச்சிய பொறுக்காத சிலர் செய்வினை வைத்து விட்டார்கள் சூழ்ச்சிகளில் இறங்கி விட்டனர் என்கிறார்கள்
இதிலிருந்து மீளத்தான் அஜித் குடும்பத்துடன் முக்கிய கோவில்களுக்கு சென்று வந்திருக்கிறார்.இதனால் சிக்கல்கள் தீர்ந்தன என்கிறார்கள். இனி அவருக்கு வெற்றிமேல் வெற்றிதானாம்.
அஜீத்தின் மனைவி ஷாலினியே பண ஏற்பாடு மற்றும் படத்தயாரிப்பு வேலைகள் ஆகியனவற்றைக் கவனித்துக் கொள்ளப்போகிறாராம்
எல்லாவேலைகளும் நிறைவடைந்து படம் தொடங்கத் தயாராகிவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.
செய்வினைக்கு அவ்வளவு சக்தியா?
கட்சி தொடங்குவதற்கு முன்னர் விஜய்யை புஸ்சி ஆனந்த் தன வசம் வைத்துக்கொள்வதற்காக வசியம் செய்திருந்தார் என்கிற ஒரு தகவல் பரவி இருந்தது. ஒரு விழாவில் தன்னுடைய இடுப்பில் எலுமிச்சம் பழம் வைத்திருந்தார் என்பதை ஒரு ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர் படத்துடன் குமுறி இருந்தார் என்பது நினைவுக்கு வருகிறது,
ஒருவேளை அஜித்துக்கு எதிராக செய்வினை வைத்தவர்கள் விஜய்யின் ரசிகர்களாக இருப்பார்களோ ?












