நடிகையாக முத்திரை பதித்த காதல் கோட்டை இயக்குனர் அகத்தியனின் மகள் விஜயலட்சுமி, தற்பொழுது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தது மட்டும் இன்றி, பாடலாசிரியராகவும் களமிறங்கி உள்ளார்.
கிருஷ்ணா மற்றும் ஆனந்தி கதாநாயகன்,கதாநாயகியாக நடிக்கும் ‘பண்டிகை ‘ படத்தின் தயாரிப்பாளரான இவர் இப்படத்தின் பாடல் ஒன்றையும் எழுதியுள்ளார் . இது குறித்து இயக்குனர் பெரோஸ் கூறியதாவது,

”கவிதைகள் எழுதும் வழக்கம் கொண்டவர் விஜயலட்சுமி . அவரது பல கவிதைகள் எங்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது .’பண்டிகை ‘ படத்தின் ஒரு பாடலுக்காக நாங்கள் சில பாடலாசிரியர்களை அணுகினோம். அவர்கள் தந்த வரிகளில் எனக்கு திருப்தி அளிக்காத நிலையில் , விஜயலட்சுமி, ‘நான் எழுதலாமா’ எனக் கேட்டார் . நானும் தடுக்கவில்லை. ஒரு சில நாட்களில் கழித்து அவர் எழுதியிருந்த வரிகளை படித்து மலைத்து போனேன். இசைக்கும் கதை நிலவரத்திற்கும் மிக சரியாக பொருந்தும் வரிகள்!. ‘அடியே’ என தொடங்கும் இப்பாடல் வரிகளை நானும் இசையமைப்பாளர் ஆர்.எச்.விக்ரமும் மிகவும் ரசித்தோம். ஜூலை 7 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள ‘பண்டிகை ‘ க்கு நல்ல சினிமாவை எப்பொழுதும் கொண்டாடும் தமிழ் சினிமா ரசிகர்கள் வரவேற்பு அளிப்பார்கள் என நம்புகிறேன் என்கிறார்.