
தமிழ்ச்சினிமாவின் மும்மூர்த்திகளான விஜய்,சூர்யா, அஜித் ஆகியோருடன் இணக்கமாக கேரளத்தின் உச்ச நட்சத்திரங்கள் இருக்கிறார்கள்.மம்மூட்டி, மோகன்லால் இருவரை தமிழகமும் விரும்புகிறது.
கன்னட உச்சங்கள் ஒட்டுவதில்லை. ஆந்திர மிளகாய்கள் எல்லை தாண்டுவதில்லை.தாண்டினாலும் வணக்கம் வைத்து விட்டு சென்று விடுகிறார்கள். முன்னொரு காலத்தில் ஆந்திர நடிகர்கள் ஆதிக்கம் தமிழ்ச்சினிமாவில் இருந்தது.
முன்னைப்போல் இன்றில்லை. ‘நானும் தமிழன்தான்’ என்கிற முகவரியை எழுதி வைத்துக் கொள்கிறார்கள்.
அது போகட்டும் அது வேறுவகையான தலையிடி!
பழகுவதிலும் பேசுவதிலும் கேரள உச்சங்கள் உள்ளங்களில் கள்ளம் இருந்ததில்லை.
“மோகன்லால்-சூர்யா இணைந்து நடிப்பது பற்றி முன்னரே ‘முரசத்தில்’ சொல்லப்பட்டிருக்கிறது.
“கடவுள் எல்லா இடங்களிலும் இருக்க இயலாது.அதனால்தான் அம்மாவைப் படைத்திருக்கிறார்” என்கிறார் மோகன்லால் .
அன்னையர் தின வாழ்த்துதான் மேற்சொன்னவை.!
சூர்யாவுடன் நடிப்பது பற்றி என்ன சொல்கிறார்?
“நான் அவருடன் நடிப்பதற்கு ஆசிர்வதிக்கப்பட்டவன்”
என்னே பணிவு !
அவருக்கு சூர்யா சொன்னது என்ன?
“நான் உங்களுடன் இணைந்ததற்கு எவ்வளவு நன்றிகளை சொன்னாலும் ஈடும் இல்லை.இணையும் இல்லை.”என்கிறார்.












