
காதல்,ஊதல் என்று சுற்றிக்கொண்டிருந்த விஷால் மகிழ்ச்சியின் எல்லைக்கு போய் விட்டதாக சொல்லி இருக்கிறார்.
இவரும் வரலட்சுமியும் ஒன்றாக சுற்றியதை காதல் என ஊடகங்கள் கற்பிதம் செய்து கொள்ள அதை தனக்கு சாதகமாக பயன் படுத்திக் கொண்டவர் விஷால்.
“காதல்தான்.காதல் திருமணம்தான்!”என கடைசி வரை சுருதி குறையாமல் சொல்லி வந்ததை உண்மையென நம்பி பலவித கதைகள்.
ஆனால் அவரது நண்பர் ரமணா வழியாக ஹைதராபாத்தில் இருக்கிற கோடீஸ்வர வீட்டுச்சம்பந்தம் கிடைத்தது. வானத்தின் மேலே எண்ணற்ற விண்மீன்கள்.இந்த மணமகளுக்கு மேலே எத்தனையோ மின் விளக்குகள்.
அடுத்த வாரம் நிச்சயதார்த்தம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
“மகிழ்ச்சி.சந்தோஷமோ சந்தோசம்! எஸ். அவரது பெயர் அனிஷாஅல்லா.திருமணம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனது அடுத்த கட்ட பயணம்”என சொல்கிறார் விஷால்.
தேர்தல் தேதி அடுத்த மாதம் 18 ம் தேதி.தொடர்ந்து ஆறு நாட்கள் விடுமுறை.
இந்த நாட்களில் ஏதாவது ஒரு நாளில் கல்யாணம் நடக்குமா?













