
உலகநாயகன் கமலுக்கு ஊருக்குள்ள நல்ல பேரு.
“இவர் பேசுனா அவருக்கே புரியாது “என்று ஓட்டாத ஆளே இல்லை.கருத்து கஸ்தூரியின் சுலபமான இலக்கு கமல்தான்.!
இப்போது விவேக்கும் கலாய்க்க ஆரம்பித்து விட்டார்.
விவேக்,சார்லி இருவரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் ‘வெள்ளைப் பூக்கள்’படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா நடந்தது.
சியாட்டில் வாழ் தமிழர்கள் தயாரித்திருக்கிற படம்.திகா சேகரன்,வருண் குமார்,அஜய் சம்பத்,ஆகியோர் சியாட்டிலில் கணினி என்ஜினீயர்கள் .பகுதி நேரமாக படத் தயாரிப்பிலும் இறங்கி இருக்கிறார்கள். இயக்குநர் விவேக் இளங்கோவனும் வெளிநாட்டு தமிழர்தான்! குறும்படங்கள் இயக்கி விருதுகள் வாங்கி இருக்கிறார்.
இந்த விழாவில்தான் கமல்ஹாசனை கட்டையால் பொளந்து விட்டார் விவேக்.
எத்தனை கால வன்மமோ !
அவர் பேசியதின் சுருக்கத்தை சொல்லி விடுகிறோம்.
“உதிரிப்பூக்கள்’ படம் ஒரு டிரென்ட் செட்டராக அமைந்திருந்தது.படைப்புகளின் உன்னதத்தை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பேசிக்கொண்டிருக்கலாம்.அதேபோலத்தான் வெள்ளைப் பூக்களும்.!
நான் காமடிப் படங்களில் நடித்தாலும் ஹீரோவாக நடிக்கும் படங்களுக்குத்தான் சோதனைகள் வந்து விடுகிறது.
என்னுடைய திரை உலக வாழ்க்கையில் நான் நடித்த படங்களில் ‘நான்தான் பாலா”படம்தான் மிகச்சிறந்தது என நினைக்கிறேன்.
அந்த படம் ரிலீஸ் ஆனபோது அதே சமயம் பாபநாசம் படம் வந்து என்னை நாசமாக்கியது.கமல் சார் எல்லா தியேட்டர்களையும் எடுத்துக் கொண்டு விட்டார்.” என்று சொன்னார்.
அவர் சொன்னதில் உள்நோக்கம் இருப்பதாகவே தெரிகிறது.
அதாவது விவேக்கின் நான்தான் பாலா படம் ரிலீஸ் ஆனது 2014 ஜூன் 13.
பாபநாசம் ரிலீஸ் ஆனது ஜூலை 3,2015.
கிட்டத்தட்ட ஒரு வருடம் வித்தியாசம் இருக்கிறது.
எப்படி கமல் நாசப்படுத்தி இருக்க முடியும்?












