
‘தல ‘ அஜித் நடித்த காதல் மன்னன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் சரண். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ‘மார்க்கெட் ராஜா படத்தை இயக்குகிறார்.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் ராஜாங்கம் தொடர்கிறது.
ராதிகா தான் லீட் ரோல்.! இதுவரை ஏற்றிராத லேடி தாதா சுந்தரிபாய் என்ற அசத்தலான கேரக்டர் .இன்றைய முன்னணி ஹீரோக்களுக்கு சவால் விடும் வகையில் அவரது கேரக்டர் அமைந்துள்ளது என்கிறது படக்குழு.
நாற்காலியில் கால் மீது கால் போட்டபடி இடது கையில் மிகவும் ஸ்டைலாக சுருட்டு! ராதிகா அமர்ந்திருக்க, அவரின் சிஷ்யனாக ஆரவ் பக்கத்தில் நிற்கிறார். நல்லவேளை ஓவியா இல்லை.!

சுந்தரி பாய் கேரக்டர் குறித்து இயக்குநர் தரப்பில் விசாரித்தபோது,’ என்ன சார் மேடத்தோட இந்த கெட்டப்புக்கே இப்படி மிரண்டுபோய் கேட்கிறீங்க , படம் முழுவதும் மேடம் புல்லட்டில் தான் வருவாங்க,
அவங்க வர்ற காட்சிகளை பார்த்தீங்கன்னா நிஜமாகவே மிரண்டு போயிடுவீங்க. நாங்க கூட மேடம் கார் ஓட்டுவாங்க, புல்லட் எல்லாம் ஓட்டு வாங்களான்னு சந்தேகப்பட்டோம்.
ராதிகா சரத்குமார் ஏற்கனவே கவுரவ் இயக்கத்தில் இப்படை வெல்லும் என்ற படத்தில் பஸ் டிரைவராக நடிக்க, நிஜமாகவே பயிற்சி எடுத்து பஸ்சை ஓட்டி நடித்தது குறிப்பிடத்தக்கது












