
சற்றே அடாவடிதான்.! ஆனால் அது அர்த்தமுள்ளதாக இருக்கும்.
வீம்பு பண்ணுகிற ஆள். அதில் விவேகமும் இருக்கும்.
கறுப்புக் கண்ணாடி வழியே மனிதனைப் படிக்கக்கூடிய திறமைசாலி.
அவர்தான் இயக்குநர் மிஸ்கின்!
எங்கே அந்த ஆளை ரொம்ப நாளா பார்க்க முடியல.!
துப்பறியும் நாவல்களை கொடுத்த புத்திசாலி ஆர்தர் கானன் டாயல். தன்னைத்தானே துப்பறிவாளனாக நினைத்துக் கொண்டு படைக்கப்பட்ட கதாபாத்திரம்தாம் ஷெர்லக் ஹோம்ஸ். டாயலுக்கு கொக்கெய்ன் பழக்கம் அவ்வப்போது உண்டு.டாயலும் மிஸ்கினும் பல விதங்களில் ஒத்துப் போகிற கேரக்டர்களே!
இவரது நூலகம் லண்டனில் இருக்கிறது. அங்கு போய் இருக்கிறார் மிஸ்கின்.
துப்பறிவாளன் 2 படத்துக்கான ஆய்வுகள்.
“துப்பறிவாளன் படத்தை 5 பாகமாக எடுப்பதற்கு என்னிடம் கதைகள் இருக்கிறது “என்று மிஸ்கின் முன்பு சொன்னது நினைவு இருக்கலாம்.படப்பிடிப்பும் நடக்கிறது.
துப்பறிவாளன் 2 படத்தின் நாயகன் விஷால்தான் படத்தின் தயாரிப்பாளரும் ஆவார்.












