
தமிழக அரசியலென்பது கழிவு நீர் சாக்கடையை விட மலக்கிடங்காகி விட்டது.
காசுக்குப் பேசுகிறவர்களை விட அமைச்சர்களாக இருப்பவர்கள் பேசும்போது அவர்களையும் விஞ்சி கழிவுகளை கையில் எடுத்து வீசுகிறார்கள்.
கேட்டு கேட்டு காதுகளும் உணர்வற்று போயின.
இதோ ஒரு நிகழ்வு.!
நாஞ்சில் சம்பத் என்கிற அரசியல்வாதியைப் போல தோற்றம் உள்ள ஒருவர் ஹோட்டல் அறையில் ஒரு பெண்ணுடன் கொஞ்சி குலாவுவதைப் போன்ற வீடியோவை சுற்றுக்கு அனுப்பி நாஞ்சில் சம்பத் என்றே குறிப்பிட்டு வைரல் ஆக்கி வருகிறார்கள்.
பேரறிஞர் அண்ணாவையே ஒரு பெரும் நடிகையுடன் இணைத்துப் பேசிய நிலம்தானே இது!
பொய்யான வீடியோவுக்கு நாஞ்சில் சம்பத் பதில் சொல்லியிருக்கிறார்.













