கடந்த சில தினங்களுக்கு முன் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக இன்று அதிகாலை ஈரான் நாட்டு படைகள் ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது.
இந்த திடீர் தாக்குதலில் ஈரானின் அய்ன் அல்-ஆசாத் விமான தளம் மற்றும் எர்பில் தளமும் கடுமையாக சேதம் அடைந்தது.ஈரானால் ஏவப்பட்ட 15 ஏவுகணைகள் தாக்குதல்களில் ஈராக்கில் அமெரிக்க இலக்குகள் குறைந்தது 80 “அமெரிக்க பயங்கரவாதிகள்” கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி அதிகாரபூர்வமாக செய்தி வெளியிட்டது.
இதையடுத்து அமெரிக்கா ஈரான் மீது எந்நேரமும் பதில் தாக்குதல் நடத்தலாம் என கூறப்படும் நிலையில்,இந்தியாவிற்கான ஈரானிய தூதர் அலி செகினி கூறுகையில்,
எங்கள் சகோதர, சகோதரிகளுடன் நாங்கள் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம், நாங்கள் போரை விரும்பவில்லை.நாட்டு மக்கள் கேட்டதாலேயே சுலைமானி கொலைக்கு பதிலடியாக தாக்குதல் நடத்தினோம்.
உலகில் அமைதியை நிலைநிறுத்துவதில் இந்தியா சிறந்த பங்களிப்புடன் செயல்பட்டு வருகிறது. தற்போது அமெரிக்காவுடன் எங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையில் தலையிட்டு தீர்க்க இந்தியா உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.












