
எழுத்து இயக்கம்:மனோஜ்குமார் நடராஜன்.ஒளிப்பதிவு ;பகத்குமார் ,இசை :அச்சு ராஜாமணி ,பிஆர் ஓ யுவராஜ்.
வரலட்சுமி சரத்குமார் ,மாளவிகா சுந்தர் ,ரமேஷ் திலக் ,அர்ஜெய் ,பிரகாஷ் ராகவன் (துருவங்கள் பதினாறு.)கஸ்தூரி சங்கர் .
*******
இயற்கை வளங்களை அழித்து நாட்டை பலவீனப்படுத்தும் கார்ப்பரேட் நிறுவனமான ‘அத்வைதா’ கொடைக்கானலில் பழங்குடி மக்களை வெளியேற்ற செயற்கையாக தீ வைக்கிறது. இந்த ரகசியம் சமூக ஆர்வலரான கஸ்தூரிக்கு தெரிந்து விட அதற்கான ஆதாரங்களை தேடி வைத்துக் கொண்டிருக்கிறார்.
மதுரையில் தனியார் சேனல் ரிப்போர்ட்டராக இருக்கிற வரலட்சுமி சரத்குமாரிடம் தோழி கஸ்தூரி உண்மை நிலவரங்களைச்சொல்லிவிட வரலட்சுமி சரத் குமார் சென்னைக்கு விரைகிறார்.
ஆனால் கஸ்தூரி படு கொலை செய்யப்படவே வரலட்சுமிக்கு கையொடிந்த நிலை.!
கஸ்தூரி திரட்டிய ஆதாரங்கள் எங்கே? இவர் ஒரு பக்கம் தேட ,அதே ஆதாரங்களைத் தேடி அத்வைதா கும்பலும் தேட யாருடைய கைகளுக்கு ஆதாரம் போகிறது என்பது கதை.
அத்வைதா கார்ப்பரேட் நிறுவனத்துக்குத்தான் காவல் துறை சாதகமாக இருக்கும் என்பது நாட்டு நிலவரம்.
இதே நேரத்தில் வரலட்சுமி தங்கியிருக்கிற தோழி மாளவிகா சுந்தர் வீட்டுக்குள் திருட்டுக் கும்பல் புகுந்து விடுகிறது. இவர்களது நோக்கம் கொள்ளையடிப்பது. இவர்களது முரட்டுத்தனமான தாக்குதலுக்கு ஆளாகிய அனைவரும் சித்திரவதையில் தவிக்கிறார்கள். ஆதாரம் தேடிவந்த வரலட்சுமி தன்னைப் பாதுக்காத்துக்கொள்வதே பெரும்பாடாக இருக்கிறது.
எப்படி அந்த ஆதாரம் கிடைக்கிறது என்பதை பிற்பாதியில் ரத்தம் சிந்த சொல்லியிருக்கிறார் இயக்குநர் . புலி வேட்டை ஆடுவார் என எதிர்பார்த்த வரலட்சுமிக்கு வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது.கொள்ளைக்கும்பலின் தலைவனாக அர்ஜாய் உலக மகா பொறுமைசாலி. ரவுடிகளுக்கு தலை குனிவு!
ஒரு கதையில் இன்னொரு கதையை புகுத்துகிறபோது திரைக்கதையில் ‘கப்ளிங் ‘வேலைகள் சரியாக இருக்க வேண்டும் .இல்லாவிட்டால் அவஸ்தைதான்.!
வெல்வெட் நகரம்னா எதை குறிக்கிறது.?புரியலீங்க.












