
ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் வெளியான தர்பார் படத்தை தொடர்ந்து ரஜினி தனது 168 வது படமாக சிறுத்தை சிவா இயக்கும் அண்ணாத்த படத்தில்நடித்து வருகிறார்.இப்படத்தில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், வேல ராமமூர்த்தி, ஶ்ரீமன் உட்பட பலர் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார்.
கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தின்முதல்கட்ட படப்பிடிப்பு, ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடந்து முடிந்த நிலையில்,அடுத்தக் கட்டப் படப்பிடிப்பை கொல்கத்தா, புனே உள்ளிட்ட வட மாநிலங்களில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தனர். அதற்குள் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இந்நிலையில்,இப்படத்தை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில்
‘2021 பொங்கல் விருந்தாக அண்ணாத்த திரைக்கு வரும்’ எனக் கூறியுள்ளது.. இது ரஜினி ரசிகர்கல் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.












