
உலகம் முழுவதும் சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது , ரியல் ஹீரோ, ஐஸ்கட்டி சேலஞ்ச் உள்பட புதுப்புது சேலஞ்சுகள் வைரலாகி வருவது வாடிக்கை தான்.
அது இந்த கொரோனா குவாரன்டைன் காலத்தில் மிகவும் அதிகம்,
அந்த வகையில் தற்போது இந்தியாவில் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் இடையே மரம் நடும் சேலஞ்ச் வைரலாகி வருகிறது. நடிகர் நாகார்ஜுனா மற்றும் நடிகை சமந்தாவுக்கு ராஜ்யசபா எம்.பி. சந்தோஷ் குமார், மரம் நடும் சேலஞ்ச் ஒன்றை கொடுத்துள்ளார்.
இந்த சவாலை ஏற்றுக்கொண்ட நாகார்ஜுனா மற்றும் அவரது மருமகள் சமந்தா ஆகிய இருவரும் தங்களது தோட்டத்தில் 3 மரக்கன்றுகளை வைத்து அதற்கு தண்ணீர் ஊற்றி பராமரித்தனர்.
இது குறித்த வீடியோவை சமந்தா, தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் தனது சேலஞ்சை ஏற்றுக் கொண்டு சிறப்பாக செய்ததற்காக எம்பி சந்தோஷ் குமார், சமந்தாவுக்கும் நாகார்ஜுனாவுக்கும் பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளார் ( மூணு மரக்கன்றுகளை நட்டது சாதனையா ராசா?) தமிழ் நடிகர் விவேக் செய்ததை அவர்களுக்கு எவரேனும் சொல்லக்கூடாதா?
இந்த சேலஞ்சை தொடரும் வகையில் நடிகைகள் கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலருக்கு பகிர்ந்துள்ளார். இவர்கள் தனது சேலஞ்சை ஏற்று மூன்று செடிகள் நடவேண்டும் என்றும், அதைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்றும் சமந்தா கேட்டுக்கொண்டுள்ளார்.












