
ஓடிடி தளங்களில் வெளியான படங்களை தியேட்டர்களில் திரையிட மாட்டோம் என்பதாக தியேட்டர் அதிபர்கள் சங்கத்தினர் முடிவு செய்திருக்கிறார்கள்.
தமிழ்நாடு தியேட்டர்கள் ,மற்றும் மல்டிபிளெக்ஸ் தியேட்டர்கள் ஆகியவற்றின் இரண்டு சங்கங்களும் கூடி இந்த முடிவினை அறிவித்திருக்கிறார்கள்.சூரரைப்போற்று ,சார்பட்டா பரம்பரை ஆகிய இரண்டு படங்களும் ஓடிடி தளங்களில் வெளியானவை.
என்றாலும் தியேட்டரில் வெளியிட்டாலும் வரவேற்பை பெறுகின்ற படங்கள். தியேட்டர் அதிபர்களின் தற்போதைய முடிவினால் அந்த படங்கள் தியேட்டருக்கு வருமா என்பது சந்தேகமே.!
தியேட்டரில் வெளியான பிறகு 28 நாட்கள் கழித்தே ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகவேண்டும் என்பது இவர்களது நிபந்தனையாகும். இதற்கு படத்தயாரிப்பாளர்களின் பதில் என்ன என்பது விநாயகர் சதுர்த்திக்குப் பின்னர் தெரிந்து விடும்.
லாபம் ,தலைவி ,கோடியில் ஒருவன் ஆகிய 3 படங்கள் விநாயகர் சதுர்த்தி நாள் ரிலீஸ் ஆகும்.












