உலகநாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் அவருக்கு பெர்சனல் காஸ்ட்யூம் டிசைனர் அம்ருதா ராம் . ஸ்ருதிஹாசனின் நெருங்கிய தோழி. தெலுங்கு படங்களில் ஸ்ருதியின் காஸ்டியூம் டிசைனர்.துல்கர் சல்மான் ,பார்வதி ஆகியோருக்கும் காஸ்ட்யூம் டிசைனர்.
கமல்ஹாசனின் கதர் ஆடைகளின் வடிவமைப்பாளர் அம்ருதா .!இவரது கணவர் டான்ஸ் மாஸ்டர் .
ஒரு சுவையான நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.
கமலுக்கு ஆடை வடிவமைப்பாளராக முன்னர் இருந்த பிரபல நடிகை ஒருவர் மும்பை சென்று மாடர்ன் டிரஸ்களை விலைக்கு வாங்கி வந்து கமலிடம் காட்டி அந்த நடிகையே வடிவமைத்தது என்று சொல்லிக்கொள்வாராம்..
இதை கண்டுபிடித்த ஸ்ருதிஹாசன் அந்த நடிகையின் வேஷத்தைக் கலைத்து இது மும்பை பஜாரில் வாங்கியது என்கிற உண்மையை சொல்லவே இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டு அந்த நடிகை வீட்டிலிருந்தே வெளியேறியதாக சொல்வார்கள்.தற்போது அந்த நடிகை சீனிலேயே இல்லை !
நெசவாளர்களின் துடைக்க ,அந்நிய மோகத்தை தவிர்க்க தேசப்பிதா காந்தியடிகள் கதராடையை அணிய வேண்டும் என மக்களை வற்புறுத்தினார். காங்கிரஸ்காரர்கள் கதர் அணிந்தார்கள். தற்போது அந்த கட்சியில் தலைவர்களை தவிர வேறு எவரும் கதராடையை அணிவதில்லை.
ஆனால் நெசவாளர்களின் கண்ணீரை துடைப்பதற்கு கமல்ஹாசன் தொடங்கிய கதராடையகம் தான் வெளிநாட்டில் இயங்குகிறது.
மிகப்பெரிய கதராடை உலகின் மிக முக்கியமான பேஷன் விழாவில் இடம் பெற்றிருக்கிறது. கெமிக்கல் தீமையோ மற்றெந்த தீமையோ இல்லாத ஆடைதான் கதர் என்பதை அமெரிக்காவும் உணர்ந்து இருக்கிறது.வருடத்தில் இரு தடவை நடக்கும் பேஷன் வீக் இந்த பிப்ரவரியில் நியூ யார்க் ,லண்டன் ,மிலன் ,பாரிஸ் ஆகிய தலை நகரங்களில் நடக்கவிருக்கிறது.
இதில் பிப்ரவரி 25-மார்ச் 5 ஆகிய தேதிகளில் ஏதாவது ஒரு நாளில் உலகநாயகன் கமல்ஹாசன் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கதராடைகளை பிரபலப்படுத்தும் நவீன காந்தியாக கமல்ஹாசன் மாறி இருக்கிறார். இந்தியர்கள் மறந்து விட்ட காந்தியடிகளின் கதரை ஒரு தமிழர் கமல்ஹாசன் உலக அளவில் கொண்டு செல்கிறார்.












