
ஒருவரது வாழ்க்கையைத் தழுவி திரைப்படம் எடுப்பதென்றால் அவர் சமூகத்தில் பிரபலமாக இருப்பதுடன் போராட்டங்களை சந்தித்தவராகவும் இருத்தல் வேண்டும்.
அத்தகைய பிரமுகர்களில் கன்னட நாட்டில் பிரபலமானவர் விஜய சங்கேஸ்வர்.
அவரது கதைதான் விஜயானந்த் .
பிரின்டிங் துறையில் அப்பா இருக்கிறார் என்பதால் அதையே தொடர விருப்பமில்லாத மகன் சரக்குப் போக்குவரத்துத் துறையில் ஈடுபட்டு இந்திய அளவில் பெரிய தொழிலதிபராக திகழ்கிறார் விஜயசங்கேஸ்வர்,
அந்த கேரக்டரில் நடித்திருக்கிற நிஹால் வாழ்ந்திருக்கிறார் என்பது உண்மை.! தொழில் போட்டிகளை எதிர்கொண்டு மருகுவதும்,மனமுடைவதும், எதார்த்தமாக நடித்திருக்கிறார்.எதிரிகளிடம் மோதுவது என்கிற முடிவுக்கு வந்த பிறகு புயலாகிவிடுகிறார்.! நடிப்பில் நற்பெயர் பெற்றே ஆகவேண்டுமென அவர் உழைத்திருக்கிறார்.
அவருடைய மனைவியாக நடித்திருக்கும் ஸ்ரீபிரகலாத், அழகு.அளவான நடிப்பு.!
ஆனந்த்நாக், பரத்போபண்ணா இன்னும் சில நடிகர்களை தேர்வு செய்திருப்பது அந்தந்தக் கேரக்டர்களுக்கு நியாயம் செய்திருப்பதைப்போல இருக்கிறது.
கீர்த்தன்பூஜாரியின் ஒளிப்பதிவு கதைக்கு உயிரோட்டமாக இருக்கிறது.
கோபிசுந்தரின் இசை சிறப்பு. .
கலை இயக்கமும் உடைகள் வடிவமைப்பும் பழைய காலத்துக்கு அழைத்து செல்கிறது.
இன்றும் வாழந்து கொண்டிருக்கும் ஒரு சாதனையாளரின் வாழ்க்கைக்கதையை அனைவரும் இரசிக்கும்படி மட்டுமல்ல அவரே இரசிக்கும்படி படமாக்கிஇருக்கிறார்கள். ரிஷிகா சர்மாவின் இயக்கம் பாராட்டுக்குரியது.












