Friday, May 15, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

‘TN 2026 தங்க நட்சத்திரம்’ – (விமர்சனம்.) ரசிக்க வைக்கும், அரசியல் நையாண்டி!

admin by admin
April 11, 2026
in Reviews
420 4
0
588
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

நட்டி நட்ராஜ், தம்பி ராமையா, எம். எஸ். பாஸ்கர், இளவரசு, சிருத்தா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த் , ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலரது நடிப்பினில் வெளிவந்திருக்கும் திரைப்படம், ‘TN 2026 தங்க நட்சத்திரம்’. கதை, திரைக்கதை தம்பி ராமையா. இயக்கம் உமாபதி எஸ்.ராமையா. ஒளிப்பதிவு பி.ஜி.முத்தையா. இசை தர்புகா சிவா. கண்ணன் ரவி குழுமத்தின் சார்பில், கண்ணன் ரவி தயாரித்துள்ளார்.

‘TN 2026 தங்க நட்சத்திரம்’, ஒரு அரசியல் நையாண்டி திரைப்படம். நக்கலும், நையாண்டியும் இயல்பாவே  தம்பி ராமையாவுக்கு வரும். அப்படியான அவர், கதை, திரைக்கதை எழுதியிருக்க அவரது மகன் உமாபதி எஸ்.ராமையா இயக்கியிருக்கிறார். இருவரும் இணைந்து, சமகால அரசியல் கூத்துக்களோட, 60 – 70 களோட சினிமா,  அரசியலையும் கலந்து கட்டி, படம் முழுவதும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்திருக்கிறார்கள். இவர்களிடம் அதிகம் சிக்கியிருப்பது ரஜினிகாந்தும், விஜய்யும் தான். தியேட்டரில் அதை உறுதி செய்கிறார்கள். நமது பக்கத்து சீட்டில் உட்கார்ந்து படம் பார்ப்பவர்கள். அரசியல் புரிந்தவர்களும், செய்தித்தாள் படிப்பவர்களுக்கும் இது மேலும் சிரிப்பினை வரவழைக்கும்.

You might also like

‘29’ – விமர்சனம்!

‘கர’ – (விமர்சனம்.) வங்கிகளின் கறை!

‘பிரேக்ஃபாஸ்ட்’ (BreakFast)  –  விமர்சனம்!

வடமாநிலத்தை சேர்ந்த அறிமுக நடிகர், நட்டி நட்ராஜ். அவரை தமிழ்நாடு ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். டுத்த எம்ஜி ஆர் அவர் தான் என மக்களிடம் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், நட்டி நட்ராஜ் பொள்ளாச்சி படப்பிடிப்புக்கு வரும் போது, ஜமீன்தார் தம்பி ராமையாவுடன் நட்பு ஏற்படுகிறது. எம்ஜிஆரின் தீவிர ரசிகரான தம்பி ராமையா, நட்டி நட்ராஜை மிகப்பெரிய ஹீரோவாக உருவாக்குகிறார். அதோடு அரசியலிலும் ஈடுபடுத்தி அவரை அடுத்த முதல்வராக உருவாக்க முயற்சிக்கிறார். அதன்பிறகு என்ன நடந்தது? என்பது தான், ‘TN 2026 தங்க நட்சத்திரம்’ திரைப்படத்தின், நக்கலும் நையாண்டியும் நிறைந்த திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

படத்தின் முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை, ரசிகர்களை சிரிக்க வைப்பதையே குறிக்கோளாக கொண்ட இயக்குநர் உமாபதி ராமையா, அதை செவ்வனே செய்திருக்கிறார். என்ன தான் கதையையும், கதாபாத்திரங்களையும் சாடலாக சொல்லியிருந்தாலும் அது படம் பார்ப்பவர்களால் காட்சிகளை எளிதில் யூகிக்க முடிகிறது. அதிலும் ஹீரோவான நட்டி நட்ராஜ்ஜுக்கு இயற்கையாகவே ரஜினிகாந்தின் சாயல் இருப்பது இந்தப்படத்திற்கான கூடுதல் பலம். படம் முழுவதும் புஸ்ஸி ஆனந்தின் சாயலாக வருகிறார், தம்பி ராமையா காமெடி சரவெடிகளை வீசிக்கொண்டே இருக்கிறார். கூடவே எம். எஸ் பாஸ்கர் மற்றும் இளவரசு, கூடுதல் சிறப்பு செய்கிறார்கள். சிருத்தா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த் , ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் அந்தந்த கதாபாத்திரங்களில் மிளிர்கிறார்கள். யூகிக்க முடியாத க்ளைமாக்ஸ் ரசிக்க வைக்கிறது.

‘குல்கந்த் குமார்’ கதாபாத்திரத்தில், நட்டி நட்ராஜ் வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறார். இவர் நடித்த காட்சிகளை பார்ப்பவர்கள் யாரும் சிரிக்காமல் இருக்க முடியாது!

ஒளிப்பதிவு பி.ஜி.முத்தையா. 60 – 70 களின் காலக்கட்டத்திலிருந்து தற்போதைய காலக்கட்டம் வரை, காட்சிகளை ரசிக்கும் வண்ணம் செய்திருக்கிறார்.

இசை தர்புகா சிவா. காட்சிகளுக்கு பலமாகவே இருக்கிறது. பாடல்களும் கேட்கும் வண்ணம் அமைந்துள்ளது.

நடிகர், ரசிகர் மன்றம், அரசியல், முதலமைச்சர் கனவு. இவைகளை கலகலப்பாக பார்க்க்கியிருக்கிறார், இயக்குநர் உமாபதி ராமையா. சட்டமன்றதேர்தல் நெருங்கி வரும் சூழலில், இப்படம் வெளியாகியிருப்பது, படத்தின் வெற்றிக்கு பலமாக இருக்கும்.

‘TN 2026 தங்க நட்சத்திரம்’ – ரசிக்க வைக்கும் அரசியல் நையாண்டி!

admin

admin

Related Posts

‘29’ – விமர்சனம்!
Reviews

‘29’ – விமர்சனம்!

by admin
May 9, 2026
‘கர’ – (விமர்சனம்.) வங்கிகளின் கறை!
Reviews

‘கர’ – (விமர்சனம்.) வங்கிகளின் கறை!

by admin
May 1, 2026
‘பிரேக்ஃபாஸ்ட்’ (BreakFast)  –  விமர்சனம்!
Reviews

‘பிரேக்ஃபாஸ்ட்’ (BreakFast)  –  விமர்சனம்!

by admin
April 24, 2026
‘மிஸ்டர் எக்ஸ்’ – விமர்சனம்!
Reviews

‘மிஸ்டர் எக்ஸ்’ – விமர்சனம்!

by admin
April 17, 2026
‘ரூம் பாய்’ – விமர்சனம்!
Reviews

‘ரூம் பாய்’ – விமர்சனம்!

by admin
April 17, 2026

Recent News

‘சைலண்ட் இன்ஃபுளூயன்சர்’ ஆல்பம் வெளியீடு!

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸின்  ‘வேலும் மயிலும்’ ஆல்பம்!

May 14, 2026
‘சைலண்ட் இன்ஃபுளூயன்சர்’ ஆல்பம் வெளியீடு!

‘சைலண்ட் இன்ஃபுளூயன்சர்’ ஆல்பம் வெளியீடு!

May 14, 2026
ராம்சரணின் ‘பெத்தி’ திரைப்படத்தை ஹொம்பாலே ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

ராம்சரணின் ‘பெத்தி’ திரைப்படத்தை ஹொம்பாலே ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

May 14, 2026
பாராட்டுக்களைக் குவிக்கும் ‘அங்கீகாரம்’ படத்தின் டிரெய்லர்!

பாராட்டுக்களைக் குவிக்கும் ‘அங்கீகாரம்’ படத்தின் டிரெய்லர்!

May 13, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?