தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் என்.டி ஆர் பாலகிருஷ்ணா மற்றும் அவரது குடும்பத்தினரின் அழைப்பை ஏற்று, நடிகரும், ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சருமான என்.டி.ராமாராவின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் விமானம் மூலம் இன்று விஜயவாடா சென்றார்.
அவருக்கு நடிகர் பாலகிருஷ்ணா சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஜினிகாந்திற்கு பொன்னாடை அணிவித்து வரவேற்ற பாலகிருஷ்ணாவை ரஜினிகாந்த் கட்டித்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்தை பெரும் உற்சாகத்துடன் பாலகிருஷ்ணா ரசிகர்கள் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியினரும் வரவேற்றனர் தொடர்ந்து,ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ரஜினிக்கு பூங்கொத்து கொடுத்து பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.விழாவில் ரஜினிகாந்த் தெலுங்கில் பேசினார்.
சந்திர பாபு நாயுடு தனது 30 ஆண்டு கால நண்பர் என்றும், அவருக்கு இந்திய அரசியல் மட்டுமல்ல உலக அரசியலும் அத்துபடி அவரது சிந்தனை முழுவதும் தெலுங்கு தேச மக்களை பற்றியே அவர்களின் எதிர்காலத்தை பற்றியே இருக்கும். அவர் அன்றே டிஜிட்டல் இந்தியாவை பற்றி பேசி அதை செயல் படுத்தி காட்டியவர் என்றும் பேசினார்
இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது.













