பிச்சைக்காரன் படத்துக்கு கிடைத்த பெரும் வரவேற்பை தொடர்ந்து விஜய் ஆண்டனி பிச்சைக்காரன்-2 படத்தில் நடித்து வருகிறார்.இசையமைப்பாளர் தயாரிப்பாளர், நடிகர் என பன்முகங்களை கொண்ட விஜய் ஆண்டனியே இப்படத்தின் மூலம் இயக்குநராகவும் களமிறங்கியுளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பு மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்து வந்த நிலையில்,லங்காவி தீவில் கடல் பகுதியில் நடந்த சண்டைக்காட்சியில் எதிர்பாராதவிதமாக .விஜய் சென்ற தண்ணீர் படகு திடீரென கட்டுப்பாட்டை இழந்து கேமரா குழுவினர் மற்றும் அமைப்பை ஏற்றிச் சென்ற பெரிய படகில் மோதியது. படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் விஜய் ஆண்டனிக்கு தாடை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.
கோலாலம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அறுவை சிகிச்சையும் நடந்தது.தொடர்ந்து தான் குணமடைந்ததாக கூறி, படத்தின் சூட்டிங்கையும் தொடர்ந்த நிலையில், படத்தின் ரிலீசில் பிரச்சினைகள் ஏற்பட்டு தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை விஜய் ஆண்டனி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் , வரும் மே மாதம் 19ம் தேதி இப்படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் நாளை இப் படத்தின் ட்ரெயிலர் வெளியாகவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.













