சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து குறித்து ஜெயிலர் பட விழாவில் ரஜினி சொன்ன குட்டிக்கதை விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.நடிகர் விஜய்யும் அட போங்கப்பா நான் அடுத்தப்படத்துக்கு ரெடியாகணும் என துபாய்க்கு ஓய்வெடுக்க சென்று விட்டார்
இந்நிலையில் பிரபல படத்தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தனது ட்விட்டரில், “திரைப்பட தொழில் ஒரே சூப்பர் ஸ்டார் என்ற காலம் எல்லாம் எப்போதோ முடிந்துவிட்டது. ஒவ்வொரு ஸ்டாருக்கும் ஒரு மார்க்கெட் ஷேர் இருக்கும்,
ஒவ்வொரு படத்திற்கும் அதன் ரிலீஸ் தேதி, கன்டென்ட், போட்டி, காம்பினேஷன் . உள்ளிட்ட விஷயங்கள் அதை தீர்மானிக்கும்.சினிமாத்துறை இதை புரிந்துகொண்டால் ஒவ்வொருவரும் மாறி மாறி உதவுவார்கள், மொத்த துறையும் எல்லைகள் கடந்து வளரும்.
தெலுங்கு சினிமா தான் அதற்கு சமீபத்திய உதாரணம். திரையுலக நடிகர்கள் , ரசிகர்கள் என எல்லோரும் இதை புரிந்து கொள்ள வேண்டும். இது எல்லா இடங்களிலும் நடந்தால் மொத்த இந்திய சினிமா துறையும் சிறந்த தரத்திற்கு மாறும். .என்றும் அவர் பதிவிட்டுள்ளது திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.













